இலங்கை பெண் ரிசானா நபீக்குக்கு சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஐ.நா.பொதுச் செயலர் பான் கீ மூன் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொதுச் செயலர் தனது கண்டனத்தில்,
ரிசானா நபீக்குக்கு சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை கவலையளிக்கிறது.இந்த சம்பவத்திலிருந்து,சவுதி அரேபியாவில் மரண தண்டனை பயன்பாடு அதிகரித்துச் செல்வதையே உணரமுடிகின்றது.
சவுதி அரேபியாவுக்கு பணிக்காகச் செல்லும் இருபாலாரையும் அவர்களின் குடியேற்றம், தேசியநிலை என்பன கருத்திற் கொள்ளப்பட்டு சர்வதேச சட்டத்தின் கீழ் நியாயமாக அந்த நாட்டு அரசு நடத்த வேண்டும்.
சவுதி அரேபியாவில் தற்போது பெண்களுக்கு நீதிமன்றங்களை சமமாக அணுகும் அல்லது நீதி பெற சமமான வாய்ப்பு இல்லை எனவும் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’