இலங்கையில் இடம்பெற்ற மோதலுக்கு வழிவகுத்த அடிப்படைக் காரணிகளுக்கான தீர்வு மேலும் தாமதமின்றி காணப்பட வேண்டியதன் அவசியத்தை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளதாக ஐ.நா. செய்திகள் தெரிவித்துள்ளது.
நியூயோர்க்கில் நேற்று திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்திற்கும் இடையிலான சந்திப்பின்போதே இது தெரிவிக்கப்பட்டது. இலங்கையில்; மோதலுக்கு பின்னரான நிலைமைகள் மற்றும் ஐக்கிய நாடுகளுடனான கூட்டுறவு தொடர்பில் இவர்கள் கருத்துப் பரிமாறிக்கொண்டனர்' எனவும் ஐ.நா. செய்திகள் கூறியுள்ளது. வடபகுதியில் மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்றத்தின் எஞ்சிய பணிகள் மற்றும் முன்னேற்ற நிலைமைகள் தொடர்பிலும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் அண்மைய முயற்சிகள் தொடர்பிலும் பான் கீ மூன் கவனம் செலுத்தினார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’