இ லங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தி.மு.க.தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு குறித்து கலைஞர் கருணாநிதி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங், கருணாநிதிக்கு எழுதிய பதில் கடிதத்தில், இலங்கையில் இறுதிக்கட்ட போர் முடிவுற்ற பின்னர் இலங்கைத் தமிழர்களின் நலனில் இந்திய அரசு கவனம் செலுத்துகிறது. தமிழர்களின் மறுவாழ்வு, குடியுரிமைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் சமத்துவம், சுயமரியாதையுடன் வாழ வலியுறுத்தி வருகிறோம். அதிகாரப்பகிர்வு குறித்து அரசியல் கட்சிகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. -->














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’