வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 2 ஜூலை, 2010

நிபுணர்கள் குழு நியமனம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை- பான் கீ மூன்

நிபுணர்கள் குழு நியமனம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாதென ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.



கொங்கோ குடியரசின் 50 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர் காணலில் இலங்கை விவகாரம் பற்றி சுட்டிக் காட்டியுள்ளார்.
சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறிய சகல தரப்பினருக்கு எதிராகவும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்த இதனை ஓர் சந்தர்ப்பமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’