வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 9 ஜூலை, 2010

கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தை மூடுமாறு பான் கீ மூன் உத்தரவு

கொழும்பிலுள்ள ஐ.நா.பிராந்திய அலுவலகத்தை மூடுவதற்குத் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தீர்மானித்துள்ளார்.ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் புனேவையும் ஆலோசனைகளுக்காக நியூயோர்க்கிற்கு அவர் திருப்பி அழைத்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஐ.நா நிபுணர் குழுவை பான் கீ மூன் வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தேசிய சுந்தந்திர முன்னணியின் தலைவரும் நிரமாணத்துறை மற்றும் பொறியியல் தொழில்நுட்ப அமைச்சருமான விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் ஐ.நாவின் கொழும்பு அலுவலகத்தின் முன் எதிர்ப்புப் போராட்டங்களை கடந்த மூன்று நாட்களாக நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் கொழும்பில் உள்ள ஐ.நா ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அலுவலகத்தை ஐநா செய்லாளர் நாயகம் மூடுமாறு உத்தரவிட்டுள்ளார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’