வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஐ.நா. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐ.நா. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 நவம்பர், 2012

ஐ.நா.வில் இலங்கையின் நியாயங்களை 3 நாடுகள் மதிப்பிடும்



ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரைவையின் அனைத்துல ஆவர்த்தன பரீசிலனையில் இலங்கை தற்போது தன்பக்க கருத்துக்களை முன்வைத்துகொண்டிருக்கின்றது. இலங்கையின் தூதுக்குழுவிற்கு மனித உரிமைகளுக்கான ஜனாதிபதியின் விசேட தூதுவர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழுவே தன்பக்க கருத்துக்களை முன்வைத்துகொண்டிருக்கின்றது.

புதன், 15 பிப்ரவரி, 2012

நவீ பிள்ளையின் கருத்து நெறிமுறையற்றது என இலங்கை நிராகரிப்பு


ஐ. நா அமைதிகாக்கும் பணி தொடர்பான ஆலோசனைக் குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை எழுப்பிய தெரிவித்த கருத்தை ஐ.நாவுக்கான இலங்கைத் தூதரகம் நிராகரித்துள்ளதுடன், இது நியாயமற்றதும் ஒழுக்க நெறியை மீறுவதுமாகும் என நேற்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது.

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

இலங்கையின் மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு: ஐ.நா.

லங்கையில் எஞ்சியிருக்கின்றதான மனிதாபிமானத் தேவைகளை நிறைவேற்றும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் உதவி ஒத்துழைப்புக்களை நல்குவதற்கு காத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. மேலும், நிலையான சமாதானத்துக்கு அத்தியாவசியமானதென ஐக்கிய நாடுகள் சபையினால் கருதப்படுகின்ற நல்லிணக்கத்தை மேம்படுத்தும் விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு உதவக் கூடிய வாய்ப்புக்களை எதிர்பார்த்திருப்பதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

இலங்கையின் பொறுப்புடைமைச் செயன்முறையை சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானிக்கிறது: ஐ.நா.

தேசிய பொறுப்புடைமைச் செயன்முறைக்கு இலங்கை எவ்வாறு பதிலளிக்கிறது என்பதை சர்வதேச சமூகம் மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

புதன், 22 ஜூன், 2011

பான் கீ மூனின் இலங்கை விஜயம் சரியாக காட்டப்படவில்லை

பி ரித்தானிய செனல் - 4 செய்திச் சேவையினால் தயாரிக்கப்பட்ட 'இலங்கையின் கொலைக்களம்' என்ற ஆவணப்படத்தில் ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இலங்கையின் வடபகுதிக்கு செய்த விஜயம் சரியாக காட்டப்படவில்லையென ஐக்கிய நாடுகள் சபை இன்று தெரிவித்தது.

திங்கள், 30 மே, 2011

சனல் 4 வீடியோ காட்சிகள் உண்மையானவை: ஐ.நா. பிரநிதிதி அறிவிப்பு

லங்கைப் படையினர் தமிழ் கைதிகளை சுட்டுக்கொல்லும் காட்சிகள் எனக் கூறி, பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய வீடியோ காட்சிகள் உண்மையானவை எனவும் அவை போர்க்குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதாகவும் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான ஐ.நா.வின் விசேடஅறிக்கையாளர் கிறிஸ்டோவ் ஹேய்ன்ஸ் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 3 மே, 2011

அமைதியாக எதிர்ப்பை வெளிப்படுத்த மக்களுக்கு உரிமையுண்டு: ஐ.நா.

எல் .ரி.ரி.ஈ.யுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றிருக்கக் கூடிய யுத்தக்குற்றங்கள் பற்றிய ஐ.நா.வின் அறிக்கைக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தைத் தொடர்ந்து ஐ.நா. விடுத்த அறிக்கையில், மக்களுக்கு அமைதியான முறையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் உரிமை உள்ளதென கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

ஊழியர்களுக்கு பாதுகாப்பளிக்கும் பொறுப்பை இலங்கைக்கு மீள நினைவூட்டுகிறது ஐ.நா.

மே  முதலாம் திகதி கொழும்பில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தையொட்டி, இலங்கையிலுள்ள ஐ.நா. ஊழியர்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய கடப்பாட்டை இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டும் நினைவுபடுத்தியுள்ளதாக ஐ.நா. நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

சனி, 16 ஏப்ரல், 2011

2009 ஆரம்பத்தில் பத்தாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்: ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை

யு த்தத்தின் கடைசி கட்டத்தில் அரச படையினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறிச் செயற்பட்டுள்ளதான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

பட்டியல் தயாரிக்கிறது ஐ.நா. நிபுணர் குழு

லங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கைக்கான தகவல்களைத் திரட்டுவதற்காக அணுகப்படக்கூடிய இலங்கை அதிகாரிகளின் பட்டியலொன்றை தயாரித்து வருவதாக ஐ.நா. வட்டாரங்கள் டெய்லி மிரர் இணையத் தளத்திற்குத் தெரிவித்தன.

சனி, 31 ஜூலை, 2010

சுதந்திரமாக கருத்தை வெளியிடும் புளக்குகளுக்கு ஐ.நா. கடும் எதிர்ப்பு

ஐ.நா.: தகவல்களை வெளியிடுதல் தொடர்பாக உபதேசித்தும் மற்றும் ஐ.நா.சார்பு புளக்கர்ஸ்களை வாடகைக்கமர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகின்ற அந்த சர்வதேச அமைப்பானது தனது ஊடக அங்கீகார வழிகாட்டியில் புளக்கர்ஸ் என்ற சொல்லுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.

ஞாயிறு, 25 ஜூலை, 2010

நிபுணர் குழு விசா கோரவில்லை- இலங்கைக்கான உயர் அதிகாரி

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசா அனுமதி கோரி எதுவித கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை என அமெரிக்காவிலுள்ள இலங்கை உயர் அதிகாரி தெரிவித்தார்.

ஞாயிறு, 18 ஜூலை, 2010

இலங்கை பொலிஸாரை ஐ.நா. படையில் சேர்க்கும் திட்டம் தாமதம்

நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை பொலிஸாரை ஐ.நா. சமாதானப் படையில் சேர்க்கும் ஐ.நாவின் திட்டம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் கூறப்படவில்லை.