ஐ.நா.: தகவல்களை வெளியிடுதல் தொடர்பாக உபதேசித்தும் மற்றும் ஐ.நா.சார்பு புளக்கர்ஸ்களை வாடகைக்கமர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகின்ற அந்த சர்வதேச அமைப்பானது தனது ஊடக அங்கீகார வழிகாட்டியில் புளக்கர்ஸ் என்ற சொல்லுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.
அத்துடன், ஜூலை 30 இல் தனது ஊடக வழிகாட்டியை இணையத்தளத்தில் வெளியிடவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.
ஐ.நா. வின் பொதுத் தகவல்கள் திணைக்களத்தின் தலைவரான கியோட்டாகா அகாஷாகாவே ஊடக அங்கீகாரம் மற்றும் தொடர்பாடல் பிரிவை மேற்பார்வை செய்துவருகிறார். ஆனால், ஹபிங்டன் போஸ்டில் ஐ.நா. சார்பு புளக்கொன்றை வைத்திருக்கிறார்.
ஊடக அங்கீகார மற்றும் தொடர்பாடல் பிரிவின் முன்னைய தலைவர் இன்னர்சிற்றி பிரஸுக்குக் கூறுகையில்; புளக்கர்ஸுக்கு ஐ.நா. அங்கீகாரம் வழங்குவதில்லையெனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த வருட முற்பகுதியில் சமூக ஊடகம் தொடர்பான நிகழ்வொன்று ஐ.நா.வில் இடம்பெற்றது. இதற்கு அகாஷ்கா தலைமை தாங்கியிருந்தார். தமது சொந்த புளக்குகள் தொடர்பாக ஐ.நா. அலுவலர்கள் புகழ்ந்து கருத்துத் தெரிவித்தனர். ஐ.நா. அதிகாரிகளைப் பற்றி சரியான தகவல்களை வழங்காதவிடத்து அதனை அகற்றுவதற்காக கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்கு விக்கிமீடியாவுக்கு பணம் செலுத்தியிருந்ததாக அவர்கள் கூறியிருந்தனர்.
உதாரணமாக பான் கீ மூனின் பிரதம அதிகாரி விஜேநம்பியார் மியன்மார் அல்லது இலங்கை ஆட்சிகளுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். அது தொடர்பாக யாராவது புளக்கில் தெரிவிக்கப்பட்டால் அதனை அபிப்பிராயமாக அல்லது பொருத்தமற்றதாக கருதப்படுவதற்கு இடமுண்டா? என்று இன்னர்சிற்றி பிரஸ் கேட்டது. இதற்குப் பதிலளிக்கப்படவில்லை. இந்த மாதிரியான சுதந்திரமான கருத்தை அகற்றுவது தொடர்பாக ஐ.நா. வின் சமூக ஊடகக்குழுவிற்கு வழிகாட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக ஊகிக்கப்படுகிறது. இப்போது புளக்கர்ஸ் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’