வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 3 மே, 2011

அமைதியாக எதிர்ப்பை வெளிப்படுத்த மக்களுக்கு உரிமையுண்டு: ஐ.நா.

எல் .ரி.ரி.ஈ.யுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றிருக்கக் கூடிய யுத்தக்குற்றங்கள் பற்றிய ஐ.நா.வின் அறிக்கைக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தைத் தொடர்ந்து ஐ.நா. விடுத்த அறிக்கையில், மக்களுக்கு அமைதியான முறையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் உரிமை உள்ளதென கூறப்பட்டுள்ளது.

'சகலருக்கும் அமைதியான முறையில் தம் கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் உண்டு. மே முதலாம் திகதி நடந்ததும் அதுவே' என ஐ.நா. பேச்சாளர் மாட்டின் நெசேர்க்கி இன்று பத்திரிகையாளர் மாநாட்டில் கூறினார்.
'அரசாங்கத்தின் பதிலுக்கு உரிய இடமளிக்கவுள்ளதாக நாம் பலமுறை கூறியுள்ளோம். அரசாங்கத்தின் முறையான பதில் அறிக்கையுடன் சேர்த்து வெளியிடப்படும்' என அவர் கூறினார்.

'அரசாங்கத்தினால் இன்று வரை கூறப்பட்டு வந்துள்ள யுத்;தத்தின் இறுதிக்கூட்டம் பற்றிய கருத்துக்கு மாறுபடும் விதத்தில் நிபுணர் குழுவின் அறிக்கையில் விடயங்கள் கூறப்பட்டுள்ளன. இந்த அறிக்கை, கவனத்தில் எடுக்க வேண்டிய பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக கூறியுள்ளது.
ஐ.நா. அறிக்கைக்கு எதிராக அணிதிரளும்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பையேற்ற பெருமளவிலான மக்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசாங்கம் தரும் எந்த பதிலையும் வெளியிடவுள்ளதாக ஐ.நா. கூறியுள்ளது.
இந்த வாக்குப்பாடு இப்போதும் செல்லுபடியாகும். அரசாங்கத்தின் பதில் கிடைக்குமாயின் நாம் எவ்வாறு குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்தினோமோ அதேவகையில் அதையும் பதிலையும் பகிரங்கப்படுத்துவோம்' என நெசேர்க்கி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’