வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 3 மே, 2011

கனேடிய நாடாளுமன்றுக்கு இலங்கைப் பெண்மணி ராதிகா சிற்சபைஈசன் தெரிவு

\
னடாவில் நடைபெற்ற தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண்மணியான ராதிகா சிற்சபைஈசன் வெற்றி பெற்றுள்ளார்.
இத் தேர்தலில் ஸ்காபரோ ரூச் ரிவர் தொகுதியில் இவர் போட்டியிட்டார்.
இதேவேளை கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மை ஆசனங்களை பெற்று வெற்றிபெற்றுள்ளது. புதிய ஜனநாயகக் கட்சி 70 ஆசனங்களை பெற்று இரண்டாவது கட்சியாக இம்முறை வெற்றிபெற்றுள்ளது. தேர்தல் முடிவுகளின்படி கன்சர்வேட்டிவ் கட்சி 165 ஆசனங்களையும், புதிய ஜனநாயகக் கட்சி 104 ஆசனங்களையும், லிபரல் கட்சி 34 ஆசனங்களையும், புளக் கியூபெக்குவா 2 ஆசனங்களையும் பெற்றது.

இதேநேரம் புதிய ஜனநாயகக் கட்சி உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக தெரிவாவது இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 கருத்துகள்:

Nalliah சொன்னது…

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே…
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே…
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்ர்க்குக் கடனே…
நன்னடை நல்குதல் வேந்தர்க்குக் கடனே…
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!

பெற்று வளர்த்து உலகத்தை எதிர்கொள்ளத் தயாரானவனாக ஓர் இளைஞனை உருவாக்குதல் ஒரு தாயின் கடமை. அவனை உயர்ந்தோனாக பரிணமிக்கச் செய்தல் தந்தையின் கடமை. தாயும் தந்தையும் தத்தம் பணியினை ஒழுங்காகச் செய்தால் அவர்களுக்கான நல்ல மகன் அல்லது மகள் மட்டுமல்ல சமுதாயத்துக்கு ஒரு நல்ல தலைமுறையும் கிடைக்கும்.


நல்லையா தயாபரன்

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’