வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

இலங்கையின் பொறுப்புடைமைச் செயன்முறையை சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானிக்கிறது: ஐ.நா.

தேசிய பொறுப்புடைமைச் செயன்முறைக்கு இலங்கை எவ்வாறு பதிலளிக்கிறது என்பதை சர்வதேச சமூகம் மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
மனிதாபிமான நடவடிக்கை குறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட புதிய அறிக்கை தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நேசிர்க்கியிடம் கேட்டபோது, இது தொடர்பான உத்தியோகபூர்வ குறிப்பு எதுவும் கிடைக்காத நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவிக்க அவர் மறுத்துள்ளார்.
ஐ.நா. அறிக்கையின் ஏனைய சிபாரிசுகள் ஒவ்வொருவரினதும் பார்வைக்கு உள்ளது. தேசிய பொறுப்புடைமை மற்றும் மற்றும் அதன் பின்னரான தொடர்நடவடிக்கைகள் ஏனைய பல்வேறு சிபாரிசுகள் அதில் உள்ளன. சர்வதேச சமூகம், விரும்பினால் அது தொடர்பாக செயற்பட முடியும் என அவர் கூறினார்.
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை உத்தியோகபூர்வமாக எமக்கு அனுப்பப்பட்டுள்ளதா என்பதை தான் ஆராய வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’