நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை பொலிஸாரை ஐ.நா. சமாதானப் படையில் சேர்க்கும் ஐ.நாவின் திட்டம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் கூறப்படவில்லை.
இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அதற்கு உயர்ந்த தரத்திலுள்ள சுமார் 100 பொலிஸாரை ஐ.நா. சமாதானப் படையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சையை நடத்துவதற்காக ஐ.நா. அதிகாரிகள் இருவர் ஜூன் 18 ஆம் திகதி இலங்கைக்கு வரவிருந்தனர். எனினும் அவர்கள் இன்னும் வரவில்லை. இத்தாமதத்திற்கான காரணமும் கூறப்படவில்லை என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இலங்கை பொலிஸாரில் 450 பேரை சேர்த்துக்கொள்வதற்கு ஐ.நா. கோரியது. இதற்காக ஐ.நா. மேற்பார்வையுடன் நடத்தப்பட்ட பரீட்சையொன்றில் சுமார் 300 பேர் தோற்றினர். எனினும் அவர்களில் சுமார் 100 பேரே சித்தியடைந்தனர் எனவும் அப்பொலிஸ் அதிகாரி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’