வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 18 ஜூலை, 2010

ஒட்டோவா அகதிகள் அமைப்பின் அறக்கட்டளை அந்தஸ்து இரத்து

ஒட்டோவா இலங்கைத் தமிழ் அகதிகள் உதவி அமைப்பிற்கான அறக்கட்டளை அந்தஸ்தை கனேடிய வருமான முகவரகம் நீக்கியுள்ளது. அவ்வமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு வலையமைப்பின் ஒரு பகுதியாகச் செயற்பட்டதாக கனேடிய வருமான முகவரகம் குற்றம் சுமத்தியுள்ளது.

அறக்கட்டளைகளை பதிவு செய்வதை பயங்கரவாதத்திற்கு எந்தவகையிலும் ஆதரவளிப்பதற்காக துஷ்பிரயோகம் செய்வது சகித்துக்கொள்ளப்பட மாட்டாது என கனேடிய அரசாங்கம் தெளிவாக அறிவித்துள்ளது என அம்முகவரகம் செய்திக்குறிப்பொன்றில் கூறியுள்ளது.
குறித்த அமைப்பு 7,13,000 டொலர்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கியுள்ளதாக அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்படுகிறது.
புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட ஒருவரும் இந்த அமைப்பின் சார்பில் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளதாகவும் கனேடிய வருமான முகவரகம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’