கனடா வாசியான இலங்கையர் ஒருவரின் கடனட்டை மோசடியை இந்தியாவின், கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் நகரப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.தேசிய சர்வதேச வங்கிகளின் 205 போலி கடனட்டைகள் கைப்பற்றப்பட்டிருப்பதுடன் இருவர் கைதாகியுள்ளனர்.
நாகதேவனஹல்லியில் வசிக்கும் ஜெயக்குமார் சாமுவேல் அல்லது சாமுவேல் (38 வயது) மற்றும் ஹெய்ர்ஸ் அல்லது ஸ்ரீவன் (31 வயது) ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.இவர்கள் போலிக் கடனட்டைகளை தயாரித்து அவற்றைப் பயன்படுத்தி பெரிய கடைகள், விற்பனை நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்திருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கடந்த இரு வருடங்களாக இவர்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் 50 இலட்ச ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை மோசடி செய்திருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.ஜெயக்குமார் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகும். 6 வருடங்களுக்கு முன்னரே இவர் பங்களூருக்குச் சென்றுள்ளார். களஞ்சியசாலையை நிர்வகித்த அவர் நட்டமடைந்திருந்தார். சோர்ட்டி என்பவர் இவருக்கு அறிமுகமானார். சோர்ட்டி இலங்கையைச் சேர்ந்தவராகும். கனடாவில் வசித்த சோர்ட்டி குற்றச் செயலுக்காக அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர். சுகைல் என்பவரே சோர்ட்டியை ஜெயக்குமாருக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.மலேசியா, சிங்கப்பூருக்கு சென்றுள்ள சோர்ட்டி அங்கு கடனட்டைகளை போலியாக தயாரிப்பது குறித்து கற்றுக் கொண்டுள்ளார்.கடனட்டைகளை தயாரித்த அவர் சுகைல் மூலம் அவற்றை விநியோகித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, சிற்றி வங்கி, எச்.எஸ்.பி.சி., எச்.டி.எச்.சி. வங்கி, அக்ஸிஸ் வங்கி, ஸ்ரான்டர்ட் சார்ட்டட் வங்கி, எஸ்.பி.ஐ., கொடக் மகேந்திரா வங்கி, ஏ.பி.எம்.எம்.ஆர்.ஒ., பார்கிளே மற்றும் பல வங்கிகளின் பெயர்களை போலிக் கடனட்டைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.35 வெற்றட்டைகள், 5 மெஷின்கள், லமினேஷன்மெசின், மடிக்கணினி, ரூபா 27,760, ஸ்கோடாகார் என்பனவற்றை விசாரணைப் பிரிவு கைப்பற்றியுள்ளது.கைப்பற்றப்பட்ட ஸ்கோடா காரும் திருடப்பட்டதொன்று என்று பொலிஸார் சந்தேகிப்பதாக எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை தெரிவித்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’