இ லங்கைப் படையினர் தமிழ் கைதிகளை சுட்டுக்கொல்லும் காட்சிகள் எனக் கூறி, பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய வீடியோ காட்சிகள் உண்மையானவை எனவும் அவை போர்க்குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதாகவும் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான ஐ.நா.வின் விசேடஅறிக்கையாளர் கிறிஸ்டோவ் ஹேய்ன்ஸ் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
5 நிமிட நேரம் கொண்ட இந்த வீடியோ போலியானவை என இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.
இந்நிலையில் இதன் உண்மைத் தன்மை குறித்து மேற்கொள்ளப்பட்ட தடயவியல் ஆய்வு அறிக்கையை ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் கிறிஸ்டோவ் ஹேய்ன்ஸ் ஜெனீவாவில் இன்று ஆரம்பமான ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சமர்ப்பித்தார்.
இந்த வீடியோ காட்சிகள் உண்மையானவை என்பதே நிபுணர்களின் தீர்மானம் என கிறிஸ்டோவ் ஹேய்ன்ஸ் கூறினார். இந்த காட்சிகள் போர்க் குற்றத்தை பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை கருத்துத் தெரிவிக்கையில், இந்த புதிய தகவல் தொடர்பாக .ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பிரதிபலிப்பை வெளிப்படுத்த வேண்டும் எனவும் 2009 ஆம் அண்டு செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானமொன்றை மீளாய்வு செய்ய வேண்டும் எனவும் கோரினார்.
அவரின் கருத்துக்கு அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
(நிபுணர்) குழுவினால் ஆவணப்படுத்தப்பட்டு எமது கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட இத்தீவிர துஷ்பிரயோகங்கள் குறித்து இந்த பேரவை கருத்திற்கொள்ள வேண்டும். யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சர்வதேச மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் ஆராய வேண்டும். அக்குற்றங்களை யார் செய்தார்கள் என்பது பொருட்டல்ல' என அமெரிக்கத் தூதுவர் எய்லீன் சாம்பர்லெய்ன் டோனாஹோ கூறினார்.
எனினும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலுள்ள ஆபிரிக்க மற்றும் இஸ்லாமிய நாடுகள், இலங்கை யுத்தம் தொடர்பான விவாதத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’