வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 1 நவம்பர், 2012

ஐ.நா.வில் இலங்கையின் நியாயங்களை 3 நாடுகள் மதிப்பிடும்



ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரைவையின் அனைத்துல ஆவர்த்தன பரீசிலனையில் இலங்கை தற்போது தன்பக்க கருத்துக்களை முன்வைத்துகொண்டிருக்கின்றது. இலங்கையின் தூதுக்குழுவிற்கு மனித உரிமைகளுக்கான ஜனாதிபதியின் விசேட தூதுவர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழுவே தன்பக்க கருத்துக்களை முன்வைத்துகொண்டிருக்கின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜனநாயகத்தை கொண்டுவருதல், சிறுவர் போராளிகளின் புனர்வாழ்வு, காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை போன்றவை தொடர்பிலான கேள்விகளே எதிர்பார்க்கப்படுகின்றன. மனித உரிமைகள் மேம்படுத்தல் மற்றும் பாதுகாத்தலுக்கான வேலைத்திட்டம் என்பது தனது பிரதான கொள்ளை ஆவணமாக இலங்கை தூதுக்குழு பயன்படுத்தவுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஐரோப்பியா ஒன்றியம் அங்கத்துவ நாடுகள் கியூபா, சீனா ஆகிய நாடுகளும் கேள்விகளை அனுப்பியுள்ளன. இந்தியா தலைமையில் பெனின் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளை கொண்ட ஒரு குழு இலங்கையின் கருத்துக்களை மதீப்பீடு செய்யும் இலங்கை அரசாங்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிவில் சமூக குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து இதனடிப்படையில் மதீப்பீடு அமையும் என்று தெரிவிக்கப்படுகின்றது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’