வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 1 நவம்பர், 2012

சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வன்முறைக்கு எதிராக துண்டுப்பிரசுரம் விநியோகிக்க தீர்மானம்



சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வன்முறைக்கு எதிராக மக்களை விழிப்புணர்வூட்டும் வகையில் துண்டுப்பிரசுர விநியோகம் செய்ய உள்ளதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நாடு முழுதும் அதிகரித்துவரும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்கள் பாலியல் வன்புணர்வு என்பன உள்ளிட்ட அநீதிக்கெதிரான ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மக்களை விழிப்புணர்வூட்டும் வேலைத் திட்டத்தின் ஓரங்கமாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கை இம்மாதம் எதிர்வரும் 3ஆம் திகதி சனிக்கிழமை நீர்கொழும்பு நகரத்தில் மணிக்கூட்டு கோபுரப்பகுதியிலிருந்து ஆரம்பமாகவுள்ளது. இதன்போது எதிர்க்கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், பெண்கள் மற்றும் இளைஞர், தலைவர்கள், சிவில் சமூக சேவை பிரதிநிதிகள் உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் கலந்துகொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’