வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 1 நவம்பர், 2012

மக்களுக்கு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வீதிகளை பிரதேசசபை புனரமைக்க வேண்டும் வலிமேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தீர்மானம்.


க்களின் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வீதிகளை பிரதேசசபை புனரமைக்க வேண்டும் என வலிமேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழு வலிகாமம் மேற்கு பிரதேச சபையிடம் வேண்டு கோள் விடுத்துள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று (31) நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள்  இவ்வீதிகள் மக்களுக்கு ஏற்படுத்தும் அசௌகரியங்கள் குறித்து பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரான ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன்  கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக தொடர் அழுத்தங்களையும் பிரயோகித்தனர் இதைத்தொடர்ந்து  பிரதேச ஒருங்கிணைப்புக்குழு ஏகமனதாக குறித்த தீர்மானத்தை எடுத்தது. இது தொடர்பாக ஓருங்கிணைப்புக் குழுத்தலைவரால் பிரதேசசபைக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளில்.

வலிகாமம்மேற்கு பிரதேச சபைக்கு சொந்தமாக வீதிகளை புனரமைப்பதற்கு நெல்சிப் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவே குறித்த நிதியை பயன்படுத்தி மக்களுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்தும் வீதிகளை புனரமைக்க பிரதேசசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்தோடு இச் செயற்பாட்டின் போது  வீதிகளின் தெரிவுகள் சரியானதாகவும் அனைத்துமக்களும் பயன் பெறக்கூடிய வகையிலும் அமைய வேண்டுமெனவும் குறிப்பிட்டார் இத்தீர்மானத்தை பிரதேச ஒருங்கிணைப்புக்குழு ஏகமனதாக நிறைவேற்றி பிரதேச சபைக்கு வேண்டுகோளையும் விடுத்தது.

நேற்று வலிகாமம் தெற்கு பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில்.

குறித்த பிரதேச செயலக மக்கள்  எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தேவைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அதாவது பாதுகாப்பு,மின்சாரம்,சுகாதாரம்,கூட்டுறவு மீன்பிடி, விவசாயம்,கல்வி ,வீதி அபிவிருத்தி போன்ற விடயங்கள் குறித்து தனித்தனியாகவும் விரிவாகவும் ஆராயப்பட்டது. இவற்றில் தொடர்ந்து நடவடிக்கைக்கு உட்படுத்தாத விடயங்கள் இனங்காணப்பட்டு அவற்றை விரைவாக நடைமுறைப்படுத்துமாறும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் தொடர்புடைய அதிகாரிகளுக்கு பணிப்பு விடுக்கப்பட்டது.

இக்கூட்;டத்தில் சங்கானை பிரதேசத்தில் மதுபாவனையாளர்களின் தொகை அதிகரிப்பது தொடர்பாகவும் அவர்கள் மக்களுக்கு ஏற்படுத்தும் அசௌகரியங்கள் தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இது தொடர்பாக  கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர். இதைக்கட்டுப்படுத்த சட்டங்களும் பொலிசாரும் செயற்பட்டு வருகின்ற போதும் மக்களின் விழிப்புணர்வே முக்கியமானதெனவும் குறிப்பிட்டார.; அத்தோடு சட்ட ரீதியாக இயங்கும் மதுபானசாலைகளை நிறுத்த முடியாதெனவும் புதிய அனுமதிகளை வழங்குவது தொடர்பில் இறுக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் தெரவித்தார்.
மேலும் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகளை  பயன்படுத்துவதிலும் சட்ட வரையறைக்குட்பட்ட வகையில் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் வலிகாமம்மேற்கு பிரதேசசெயலர் சோதிநாதன் ஈ.பி.டி.பியின் வலிகாமம் அமைப்பாளரும், வலிகாமம் மேற்கு பிரதேசசபை உறுப்பினருமான சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) வலிகாமம் மேற்கு பிரதேசசெயலக உதவித்திட்டப்பணிப்பாளர் சிவகுமார் வலிமேற்கு பிரதேசசபையின் செயலாளர் திருமதி சாரதாதேவி, ஆகியோரும் திணைக்களங்களின் தலைவர்களும் அலுவலர்களும் கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.  





->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’