மே முதலாம் திகதி கொழும்பில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தையொட்டி, இலங்கையிலுள்ள ஐ.நா. ஊழியர்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய கடப்பாட்டை இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டும் நினைவுபடுத்தியுள்ளதாக ஐ.நா. நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் நியூயோர்க்கில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இதைத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. அமைப்பின் பணிகள் எவ்வித தடங்கல்களும் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இன்றி தொடர்வதை உறுதிப்படுத்துவதற்காக ஐ.நா. ஊழியர்களுக்கும் சொத்துக்களுக்கும் பாதுகாப்பளிக்க வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
2010 ஜூலையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதை கருத்திற்கொண்டு, இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகங்களின் வழக்கமான நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்கத் தவறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர்கூறினர்.
எனினும் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் தமக்கு இலங்கை அரசாங்கத்தினால் அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பாக மகிழ்ச்சியடைவதாக நேற்று டெய்லி மிரர் இணையத்தளத்துக்குத் தெரிவித்திருந்தது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’