வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

பட்டியல் தயாரிக்கிறது ஐ.நா. நிபுணர் குழு

லங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கைக்கான தகவல்களைத் திரட்டுவதற்காக அணுகப்படக்கூடிய இலங்கை அதிகாரிகளின் பட்டியலொன்றை தயாரித்து வருவதாக ஐ.நா. வட்டாரங்கள் டெய்லி மிரர் இணையத் தளத்திற்குத் தெரிவித்தன.


முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவும் அப்பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புள்ள ஒருவரா என கேட்கப்பட்டபோது மேற்படி ஐ.நா. வட்டாரம் பதிலளிக்க மறுத்துவிட்டது. எனினும் நிபுணர் குழுவை சந்திக்கத் தயார் என சரத்பொன்சேகா பகிரங்கமாக கூறியுள்ளதால் அவரின் பெயர் பட்டியலில் சேர்க்கப்படலாம் அவ்வட்டாரம் தெரிவித்தது.
அணுகப்படக்கூடிய இலங்கை அதிகாரிகளின் பெயர்களை நிபுணர்குழு இன்னும் தெரிவு செய்யவில்லை. நிபுணர் குழு இலங்கை வருவதற்கு விசா வழங்கப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் ஏற்கெனவே தெரிவித்துள்ள போதிலும் தொலைபேசி மூலம் தகவல் திரட்டப்படுவதற்கு சாத்தியமுள்ளது.
இலங்கை விவகாரம் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக கடந்த ஜூன் மாதம் பான் கீ மூன், மேற்படி நிபுணர் குழுவை நியமித்தார்.
இக்குழு ஏற்கெனவே நியூயோர்கில் தனது முதல் சந்திப்பை நடத்தியுள்ளதாகவும் இரண்டாவது தடவையாக இம்மாத முற்பகுதியில் மீண்டும் அக்குழு சந்திப்பை நடத்தவுள்ளதாகவும் ஐ.நா. பேச்சாளர் பர்ஹான் ஹக் டெய்லிமிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
நிபுணர் குழுவின் உத்தியோகஸ்தர்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்நிபுணர் குழு ஒரு விசாரணைக் குழுவா என கேட்கப்பட்டபோது, சில உத்தியோகஸ்தர்கள் நவிபிள்ளையின் அலுவலுகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும் இக்குழு ஒரு விசாரணைக்குழு அல்ல, எனவும் எவ்வகையிலும் அக்குழு விசாரணைகளை நடத்தப்போவதில்லை. அது தெளிவாக ஓர் ஆலோசனைக் குழுவே எனவும் பர்ஹான் ஹக் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’