வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஐக்கிய நாடுகள் சபை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐக்கிய நாடுகள் சபை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 மார்ச், 2013

இலங்கை தோல்வி; பிரேரணைக்கு இந்தியா ஆதரவு

க்கிய நாடுகள் சபையின் மனித பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இலங்கை தோல்வியடைந்துள்ளது.

சனி, 23 பிப்ரவரி, 2013

மூனிடம் இலங்கை அறிக்கை கையளிப்பு



ம்மீதான குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட அவதானிப்பு திட்ட அறிக்கை ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் இலங்கை அரசாங்கம் கையளித்துள்ளது என்று இன்டர்சிற்றி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

புதன், 21 நவம்பர், 2012

மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேற்றம்; இந்தியா எதிர்ப்பு


ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் கொண்டுவரப்பட்ட மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் 110 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பில் 36 நாடுகள் பங்கேற்கவில்லை என்பதுடன் இந்தியா உட்பட 39 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.

திங்கள், 30 மே, 2011

ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம் _

ஜெ னிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 17 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது. பேரவையின் அமர்வுகள் எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

புதன், 19 ஜனவரி, 2011

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 51 மில்லியன் டொலர் நிதி தேவை: ஐ. நா.

ண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒரு மில்லியன் மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதற்காக 51 மில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

ஞாயிறு, 14 நவம்பர், 2010

புகைப்படங்களை சாட்சியமாக ஏற்பதா ஐ.நா நிபுணர்கள் குழுவே தீர்மானிக்க வேண்டும் : ஐ.நா பிரதி பேச்சாளர்

லங்கையில் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பெரும் எண்ணிக்கையிலான கொலைகள் நடைபெற்றுள்ளமையை பெருமளவிலான புதிய புகைப்படங்கள் வெளிப்படுத்துவதாக இன்னர் சிட்டி பிரஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

புதன், 15 செப்டம்பர், 2010

ஐ.நா.பெண்கள் அமைப்பின் தலைவராக சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி

டந்த ஜூலை மாதம் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையில் பெண்கள் அமைப்பின் முதலாவது தலைவராக சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மிச்சிலி பாச்லட் ஜேரியா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மற்றொரு ஆணைக்குழு

லங்கையில் கடந்த காலங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நியமிக்கும்; என நேபாளத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் பணிப்பாளர் எந்தனி கார்டன தெரிவித்துள்ளார்.

சர்வதேச கடத்தல் மற்றும் காணாமல் போனவர்களுக்கான தினம் இன்று அனுஷ்ட்டிக்கப்படுகிறது

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவின் நியமனம் குறித்து கருத்துக் கூற ஐ.நா மறுப்பு

க்கிய நாடுகள் சபையின் பிரதி நிரந்தரப் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவின் நியமனம் தொடர்பில் கருத்துக் கூறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை மறுப்புத் தெரிவித்துள்ளது

வெள்ளி, 23 ஜூலை, 2010

நியாயமான அகதிகளை ஆஸி, ஏற்க வேண்டும் : ஐநா பிரதிநிதி

நியாயமான அகதிகளை அவுஸ்திரேலியா ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பேரவையின் பிராந்திய பிரதிநிதி ரிச்சர்ட் டவல் கோரிக்கை விடுத்துள்ளார்.

செவ்வாய், 20 ஜூலை, 2010

ஐ நா ஆலோசனைக் குழு கூட்டம்


இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனுக்கு ஆலோசனை கூற நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றுள்ளது.

ஞாயிறு, 11 ஜூலை, 2010

ஜோன் ஹோம்ஸின் இடத்திற்கு புதியவர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பிரதி செயலாளர் நாயகமாக பணியாற்றிய ஜோன் ஹோம்ஸின் இடத்துக்கு புதியவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

செவ்வாய், 6 ஜூலை, 2010

இலங்கை தமிழர்களுக்கு உடனடி புகலிட அந்தஸ்து இல்லை–ஐக்கிய நாடுகள் சபை

இலங்கைத் தமிழர்களுக்கு உடனடி புகலிட அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் நிலையம் அறிவித்துள்ளது. கடந்த காலங்களைப் போன்று இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக புகலிடக் கோரிக்கை வழங்கப்பட மாட்டாது எனவும் அந்த முகவர் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

வியாழன், 1 ஜூலை, 2010

அமைச்சர் விமல் வீரவன்சவின் கருத்து குறித்து ஐ.நா அவதானம்

நிர்மாணத்துறை, பொறியியல் சேவை, வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச ஐ.நா தொடர்பில் வெளியிட்ட கருத்து குறித்து தமது பாதுகாப்பு அதிகாரிகள் அவதானித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

திங்கள், 28 ஜூன், 2010

இன்று நியூயோர்க்கில் ஐநா நிபுணர் குழுவின் முதலாவது அமர்வு

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள ஆலோசனைக் குழு முதல் தடவையாக இன்று நியூயோர்க்கில் கூடுகிறது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தச் செய்தியில்,

புதன், 9 ஜூன், 2010

ஐ.நா. செயலாளர் மூன் மௌனம் : மனித உரிமை அமைப்புக்கள் விசனம்

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்களில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் மற்றும் அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூன், பிரதம அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோரின் பங்களிப்பு பற்றி சர்வதேச நெருக்கடிகள் குழுவும் ஏனைய அமைப்புக்களும் கேள்வி எழுப்பியுள்ளன.

புதன், 26 மே, 2010

மக்கள் இடம்பெயர்ந்த நாடுகளின் பட்டியலில் 7 ஆவது இடத்தில் இலங்கை

சர்வதேச ரீதியாக அதிக எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர்ந்த நாடுகளில் இலங்கை 7 ஆவது இடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளி, 7 மே, 2010

வன்னியில் மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை கவலை தெரிவிக்கிறார் இங்குள்ள ஐ.நா. பிரதிநிதி

மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் வாழ்வாதாரத்துக்கான எதுவித வாய்ப்பும் அற்ற நிலையிலேயே வன்னி யிலுள்ள தமது பகுதிகளில் மீளக் குடியேற் றப்படுகின்றனர் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நெய்ல் புஹ்னே தெரிவித்துள்ளார். அரசு மீளக்குடியேறுபவர்களுக்கு வழங்கும் நிதியுதவி மிகத் தாமதமாகவே அவர்க ளைச் சென்றடைவதாகவும் குறிப்பிட் டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணைக்குழு வரவேற்புத் தெரிவித்துள்ளது


இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழ் - சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இடைநிறுத்தப்பட்டிருந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணைக்குழு வரவேற்புத் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 23 மார்ச், 2010

பான் கீ மூன் அமைக்கும் நிபுணர்கள் குழுவுக்கு எதிராக சீனாவும் ரஷ்யாவும் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும்?

இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் போர் குற்றங்களை ஆராய ஐக்கிய நாடுகள் செயாலாளர் நாயகம் நியமிக்க உத்தேசித்துள்ள நிபுணர்கள் அடங்கிய குழுவுக்கு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.