வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 23 பிப்ரவரி, 2013

மூனிடம் இலங்கை அறிக்கை கையளிப்பு



ம்மீதான குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட அவதானிப்பு திட்ட அறிக்கை ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் இலங்கை அரசாங்கம் கையளித்துள்ளது என்று இன்டர்சிற்றி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி பாலித்த கோஹனவினால் இந்த அறிக்கை நேற்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது. பாலித்த கோஹனவுடன் இணைந்து ஜப்பானிய நிரந்தர விதிவிடப் பிரதிநிதி சுனேயோ நிசிடா, பங்களாதேசின் நிரந்தரப் பிரதிநிதி அபுல் கலாம் அப்துல் முமேன், ருமேனியாவின் நிரந்தரப் பிரதிநிதி சிமோனா மிரேலா மிகுலெஸ்கு, நைஜீரியாவின் பிரதி நிரந்தரப் பிரதிநிதி உஸ்மான் சர்க்கா ஆகியோரும் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பிரதிநிதிகள் 2012 ஆம் ஆண்டு இறுதிபகுதியில் இலங்கையில் அவதானிப்பு திட்டமொன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அந்த அறிக்கையில் யுத்தத்துக்கு பின்னர் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், கற்றிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுகின்ற முறைமைகள், குறித்து உள்ளடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’