இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள்  குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனுக்கு ஆலோசனை கூற  நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றுள்ளது.
மூன்று நிபுணர்கள் அடங்கிய குழுவின் முதல் கூட்டம் திங்கள்  கிழமையன்று நியுயார்க்கில் இடம்பெற்றது என்பதை ஐ நா மன்ற செய்தித் தொடர்பாளர் பரான்  ஹக் உறுதி செய்துள்ளார். இந்த வாரம் முழுவதும் இக் குழுவினர் பிற ஐ நா அதிகாரிகளை  சந்திப்பார்கள் என்றும் அவர் கூறினார். 
இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் பல ஆயிரம்  பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை நிறுவனங்களும் சுயாதீன அமைப்புக்களும்  கூறிவருகின்றன. 
விடுதலைப் புலிகள் அமைப்பும், இலங்கை இராணுவத்தினரும்  பொதுமக்களை வேண்டுமென்றே இலக்கு வைத்து தாக்கினார்கள் என்றும் இந்த அமைப்புக்கள்  குற்றம் சாட்டியுள்ளன. 
போரில் பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று கூறும் இலங்கை  அரசு சர்வதேச சுயாதீன விசாரணைகளை அனுமதிக்க முடியாது என்று கூறிவருகிறது. போரில்  இடம்பெற்ற விபரங்கள் தொடர்பாக தனது விசாரணை ஆணையம் விசாரிக்கும் என்றும் அது  கூறுகிறது. 

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’