மணிக்கு 300 மைல் வேகத்தில் பறந்த நான்கு ஆளில்லாத விமானங்களை இந்த லேசர் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். கலிபோர்னியா கரையோரத்தில், இலக்கிலிருந்து 2 மைல் தூரத்தில் பறக்கவிடப்பட்ட இந்த ஆளில்லாத விமானங்களை யுத்தக்கப்பலில் பொருத்தியிருந்த லேயர் ஆயுதத்தினை பயன்படுத்தி வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியிருக்கிறது அமெரிக்க கடற்படை.
1960களிலேயே லேசர் பயன்பாடு ஆரம்பித்துவிட்டாலும் இப்பொழுதுதான் ஆயுதங்களுக்கு இந்த தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். நட்சத்திர போராட்ட வடிவத்தில் ரகசியமாக அரங்கேறியிருக்கிறது இந்த நாடகம்.
அமெரிக்க கடற்படையுடன் ரேய்தியொன் (Reytheon) ஏவுகணை நிறுவனம் இணைந்தே இந்த தொழில்நுட்பத்தினை பரிசோதித்திருக்கிறது. எதிர்வரும் காலங்களில் யுத்த களத்தில் பயன்படுத்துகின்ற ஆயுதங்களிலும் இந்த லேசர் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தும் பரிசோதனைகள் நடைபெற்றுவருவதாகவும் ரேய்தியொன் நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டிருக்கிறார்.
விமானங்கள் சுட்டுவிழ்த்தப்பட்ட லேசர் தொழில்நுட்பத்தில் சிற்சில தவறுகள் இடம்பெற்றிருந்ததாகவும் அந்தத் தவறுகள் எதிர்காலத்தில் நிவர்த்தி செய்யப்படும் எனவும் மேலும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’