இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழ் - சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இடைநிறுத்தப்பட்டிருந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணைக்குழு வரவேற்புத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஆன்டே மக்கேயிஸ் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இடைநிறுத்தப்பட்டிருந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 7 000 பேர் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இவரின் கருத்துப் படி கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இலங்கை அரசின் நலன்புரி முகாம்களில் இருந்து 2 07000 பேர் வெளியேறியுள்ளனர்.
இவர்கள் தங்களுடைய சொந்த இடங்களுக்கோ அல்லது உறவினர் வீடுகளுக்கோ சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’