வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 11 ஜூலை, 2010

ஜோன் ஹோம்ஸின் இடத்திற்கு புதியவர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பிரதி செயலாளர் நாயகமாக பணியாற்றிய ஜோன் ஹோம்ஸின் இடத்துக்கு புதியவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராக கடமையாற்றும் திருமதி.வெலேரி அமோஸ் என்பவரே குறித்த பதவிக்கான நியமனத்தைப் பெற்றுள்ளார் என்று தெரிவிகப்படுகின்றது.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனினால் இந்தத் தீர்மான எடுக்கப்பட்டுள்ளது என்று ஹோம்ஸின் இணைப் பேச்சாளரான ஃபர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
ஜோன் ஹோம்ஸ் இதுவரை காலம் ஆற்றிய பணிகளுக்காக அவருக்கு நன்றி தெரிவித்துள்ள பான் கி மூன், புதியவர் அந்தப் பணியைத் திறம்பட மேற்கொள்வாரென நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஜோன் ஹோம்ஸ், இலங்கை அரசாங்கத்தினரால் கடும் விமர்சனத்திற்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’