வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 11 ஜூலை, 2010

இங்கிலாந்து அணியை வீழ்த்தி பங்களாதேஷ் புதிய வரலாறு

இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது.

பிரிஸ்டல் நகரில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்காதேஷ் அணி 236 ஓட்டங்களைப் பெற்றது. இம்ருல் கயீஸ் 76 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சார்பாக ஜொனதன் ட்ரொட் 94 ஓட்டங்களைப் பெற்றபோதிலும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 231 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து அணிக்கெதிராக எந்தவொருவகை சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் பங்களாதேஷ் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மஸ்ரபி மோர்ட்டஸா இப்போட்டியின் சிறப்பாட்டக் காரராகத் தெரிவானார்.
3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் தற்போது இரு அணிகளும் 1-1 விகிதத்தில் சமநிலையில் உள்ளன. மூன்றாவது போட்டி நாளை நடைபெறவுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’