கிளிநொச்சியில் எதிர்வரும் 14ம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தப் போவதாக அரசாங்கம் அறிவித்திருப்பதானது வெறும் கேலிக்கூத்தான விடயமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது.
குறித்த பகுதியில் அமைச்சரவைக் கூட்டம் நடத்துவதற்கு முன்னர் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையைப்பற்றி அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என்று கூறிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், அதைவிடுத்து அமைச்சரவைக் கூட்டம் நடத்துவது வெறும் அரசியலாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அமைச்சரவைக் கூட்டம் நடத்த செலவு செய்யும் பணத்தை அம்மக்களின் நல்வாழ்விற்காக செலவிட்டால் சிறந்தது எனவும் அரியநேத்திரன் எம்.பி. தெரிவித்தார்.
கிளிநொச்சியைக் காணாதவர்கள் யாரும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை. எங்களைவிட அதிகமுறை கிளிநொச்சி சென்றவர்களே இன்று அதிகம் அமைச்சரவையிலுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’