இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பிரதேசத்திலுள்ள அரசாங்க முந்திரி பண்ணைக்குரிய 1200 ஏக்கர் காணி கடற்படை முகாமொன்று அமைப்பதற்கு அடையாளம் காணப்பட்டு, அதற்கான அறிவித்தல் பலகையும் நாட்டப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் கூறுகின்றார்
இது தொடர்பாக தனது ஆட்சேபனையையும் எதிர்ப்பையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். அரசாங்கத்தின் இந்த தீர்மானம் காரணமாக எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் முந்திரி செய்கையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவிக்கின்றார்
அமைச்சரிடம் கோரியும் பலனில்லை
மாவட்ட அபிவிருத்தி ஒருங்கினைப்புக் குழுக் கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் நேரடியாக இந்தத் தீர்மானத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்த போதிலும் அமைச்சர் அதனை நிராகரித்து விட்டதாக இரா.துரைரட்ணம் கூறுகின்றார்.
கடந்த இரண்டரை வருடங்களாக குறித்த பண்ணையில் எந்தவித அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாததன் காரணமாகவே பாதுகாப்பு தரப்பினரின் தேவைக்காக இக் காணி அடையாளம் காணப்பட்டதாக அமைச்சர் தனது பதிலில் கூறியதாகவும் பி.பி.சி தமிழேசையிடம் பேசிய இரா.துரைரத்தினம் குறிப்பிட்டார்.
அரசாங்கம் திட்டமிட்டு கிழக்கு மாகாணத்தில் படை முகாம்கள் அமைப்பதற்கு காணிகளை சுவீகரித்து வருவதாக இரா.துரைரத்தினம் குற்றம் சுமத்துகின்றார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’