வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 21 மார்ச், 2013

இலங்கை தோல்வி; பிரேரணைக்கு இந்தியா ஆதரவு

க்கிய நாடுகள் சபையின் மனித பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இலங்கை தோல்வியடைந்துள்ளது.
அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் இடம்பெற்ற நிலையில் பிரேரணைக்கு ஆதரவாக 25 நாடுகள் வாக்களித்ததுடன் 13 நாடுகள் எதிராக வாக்களித்தன. அத்துடன், 8 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்குபற்றவில்லை. அமெரிக்காவின் இந்த தீர்மானத்தில் இந்தியா சில திருத்தங்களை முன்வைத்த நிலையில், வாக்கெடுப்பின் போது இலங்கைக்கு எதிராகவும் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு 24 நாடுகள் ஆதரவாகவும் 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்திருந்தன. அத்துடன் அந்த வாக்களிப்பில் எட்டு நாடுகள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இலங்கைக்கு ஆதரவாக: கொங்கோ, மரூடினியா, உகண்டா, இந்தோனேசியா, குவைத், மாலைதீவு, பாகிஸ்தான், கட்டார், தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈக்குவோடோரா, வெனிசுவேலா, தாய்லாந்து இலங்கைக்கு எதிராக: பெனின், கோட்டி டிவோரி, லிபியா, சியரா லியோன், இந்தியா, கொரியா, ஆஜர்ன்டினா, பிரேசில், சிலி, கொஸ்டாரிகா, கௌத்தமாலா, பெரூ, அஸ்திரியா, ஜேர்மனி, அயர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், சுவிஸ்தலாந்து, ஐக்கிய அமெரிக்கா, செக் குடியரசு, எஸ்டோனியா, மொன்டிகோரே, போலாந்து, மொல்டோவோ குடியரசு, ரொமேனியா பங்குபற்றவில்லை: அங்கோலா, கென்னியா, கஷகஸ்தான், ஜப்பான், மலேசியா, பொட்ஸ்வானா, பேர்கின் பாஸோ, எத்தியோப்பியா, -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’