வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 21 மார்ச், 2013

அமெரிக்காவின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.நகரில் கண்டனப் பேரணி



க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கைக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்க முற்படுவதை எதிர்த்தும் மாபெரும் கண்டனப் பேரணியொன்று இன்றையதினம் யாழ் நகரப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. . (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
முனீஸ்வரன் ஆலயப்பகுதியில் இருந்து ஆரம்பமான இப்பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள் பதாதைகளைத் தாங்கியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் முனீஸ்வரன் அங்காடியூடாக மத்திய பேரூந்து நிலையம் - மின்சார நிலைய வீதி - கஸ்தூரியார் வீதி வழியாக மீண்டும் யாழ் மத்திய பேரூந்து நிலையத்தை சென்றடைந்தனர்.

இதன்போது மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன்(கமல்), நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த மேன்மை தங்கிய ஜனாதிபதி தலைமையிலான அரசு அர்த்தபுஷ்டியான நடைமுறைகளை நடைமுறைப்படுத்த தயாராகவுள்ள இத்தருணத்தில் அழிவுயுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட பின் எமது தமிழ் பேசும் மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

இத்துடன், எமது பிரதேசங்களிற்கான சகல அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தமிழ் மக்கள் சுதந்திரமாகவும், சுபீட்சமாகவும் வாழும்  இவ்வேளையில் அனாவசியமற்ற ஐ.நாவின் தீர்மானம் ஏற்றுக்கொள்ள முடியாதது. மீளவும்; தமிழ் பேசும் சமூகத்திற்கு ஓர் நெருக்கடியான நிலைமைகளை தோற்றுவிப்பதே சர்வதேசத்தின் சூழ்ச்சியாகும்.

எனவே,  சம்மந்தப்பட்ட சர்வதேச நாடுகளும், புலம்பெயர் உறவுகளும் இவ் யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு  எமது தேசத்தில் ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ள முன்வரவேண்டுமென்பதே அனைத்து தமிழ் பேசும் மக்களின் அவாவாகவுள்ளது எனக்குறிப்பிட்டார்.

தொடர்ந்து,  மத்திய பேரூந்து நிலையப்பகுதியில் வைத்து ஐ.நாவின் மனித உரிமை பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கொடும்பாவி பொதுமக்களால் எரியூட்டப்பட்டது. யாழ் குடாநாட்டின் அனைத்து பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்களும், சகோதர மொழி பேசும் மக்களும் பெருந்திரளாக இப்பேரணியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








  -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’