இ லங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு விளக்கிய உயர்மட்ட தூதுக்குழுவில் அங்கத்தவராக இருந்த நிதி அமைச்சர் பி.சிதம்பரம், அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்வுள்ள தீர்மானத்தில் சொற்பிரயோகங்களின் கடுமையை குறைக்குமாறு இந்திய கேட்டதெனும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை மீது ஒரு கடுமையான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என இந்திய விரும்பியதாக அவர் வலியுறுத்தினார். ஒரு கடுமையான செய்தியை இலங்கைக்கு தெரிவிக்கவும் சுயதீனமான ஒரு விசாரணையை நடத்த அதை நிர்ப்பந்திக்கவும் தீர்மான வரைவுக்கு இந்தியா திருத்தங்களை கொண்டுவரும் என நிதி அமைச்சர் சிதம்பரம் கூறினார். இந்தியா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இறுதி வரைவுக்கு திருத்தங்களை கொண்டுவரும் என அறிவித்து சில மணித்தியாலங்களுக்குள், இலங்கை மனித உரிமை மீறல் பற்றி அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானம் தொடர்பாக உயர் அதிகாரிகள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு விளக்கமளித்தனர். இந்த திருத்தங்கள் நேற்று இறுதி செய்யப்பட்டன. இந்த திருத்தங்களை பிரதமர் ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் சமர்ப்பிப்பார். இந்த தீர்மானம் நாளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 22ஆவது அமர்வின்போது வரும் என சிதம்பரம் கூறினார். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’