வி சாரணைகளுக்கு அரசாங்கம் அஞ்ச வேண்டிய அவசியமில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிவில் யுத்தம் தொடர்பிலான விசாரணைகளுக்கு அஞ்ச வேண்டியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் தொடர்பிலான அழுத்தங்களை சர்வதேச சமூகம் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை அடிப்படையில் நிராகரிக்க முடியாது. தம்மிடம் எவரேனும் கேள்வி எழுப்பினால் அதற்கு சகல விதத்திலும் பதிலளிக்கத் தயார். சர்வதேச சட்டங்கள் மற்றும் பிரகடனங்களுக்கு அமைவான வகையில் யுத்தம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் கேள்விகள் எழுப்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. யுத்தம் தொடர்பிலும் படையினர் தொடர்பிலும் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க அரசாங்கமும், இராணுவத் தளபதிகளும் தயாராக இருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயங்களை புறக்கணிக்கக் கூடாது, புறக்கணிக்கவும் முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்பது தமக்கு தெரியும் எனவும், விசாரணைகளுக்கு பதிலளிக்க அரசாங்கம் அஞ்சுவதாகவும், அஞ்ச வேண்டிய அவசியமில்லை எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’