தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இலங்கை விவகாரத்தில் மத்திய அரசுக்கான ஆதரவை தி.மு.க விலக்கிக் கொண்ட நிலையிலேயே இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் கடுமையான திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று திமுக வலியுறுத்தியது. ஆனால் மத்திய அரசு இதனை ஏற்கவில்லை. இதனால் மத்திய அரசுக்கான ஆதரவை திமுக விலக்கிக் கொண்டது. இந்நிலையில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் இன்று அதிகாலை 7.15 மணி முதல் காலை 8.10 மணி வரை சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மு.க.ஸ்டாலினின் நண்பர் ராஜாசங்கரின் வீட்டிலும் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து கார் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவலின் பேரிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 3 ஆண்டுகளுக்கு முன் புலனாய்வுப் பிரிவு கேள்வி எழுப்பியதாகவும், அப்போதே அதற்கான விளக்கத்தை தந்துவிட்டதாகவும் ஸ்டாலின் தரப்பு கூறுகிறது. இப்போது வேண்டுமென்றே முடிந்து போன ஒரு விஷயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சிபிஐ மூலம் மத்திய அரசு மிரட்டிப் பார்ப்பதாக திமுக குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன் தமிழகம் முழுவதும் 32 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியிருக்கின்றது. கூறப்படுகிறது வெளிநாட்டு கார்களை இந்தியாவில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் போது வரிச் சலுகைகள் உண்டு. இந்த வரிச் சலுகையை பயன்படுத்திக் கொண்டு வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்யும் டிராவல்ஸ் நிறுவனங்கள் முக்கிய பிரமுகர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றன. இப்படித்தான் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி பயன்படுத்தி வரும் ரூ. 20 கோடி மதிப்பிலான ஹம்மர் ரக வெளிநாட்டு காரும் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பயன்படுத்தியதாக கூறப்படும் வெளிநாட்டு காரை வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்ததாக ஒரு சர்ச்சை வெடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’