வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 21 மார்ச், 2013

நவனீதம்பிள்ளையின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பு



க்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில், நவனீதம்பிள்ளையின் பிரதிநிதியும், பதில் ஆணையாளருமான குயங் வாங் காங் இன்றைய தினம் இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தார். ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையை மேற்கோளாகக் கொள்ளக் கூடாது என இலங்கை பல தடவைகள் கோரியிருந்த போதிலும், நவனீதம்பிள்ளை அந்த அறிக்கையின் விடயங்களை மேற்கோளாகப் பயன்படுத்தியுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை பிரதிநிதிகளின் நடவடிக்கைகள் குறித்துயண திருப்தி அடைய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு தேவையான தகவல்களை திரட்டும் நோக்கிலேயே குறித்த பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிடுமாறு நவனீதம்பிள்ளைக்கு பல தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என மஹிந்த சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். நவனீதம்பிள்ளையின் புதிய அறிக்கை பக்கச்சார்பானது எனவும், இந்த அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பில் உலக நாடுகள் மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’