உ லக நாடுகளுடன் வீண் பிணக்குகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் இறுதியுத்தத்தில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த சுயாதீனமான சர்வதேச விசாரணைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் அமைப்பினர் நேற்று புதன்கிழமை கொழும்பு பான் பளேஸில் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் ஆவர் மேலும் தெரிவிக்கையில், போர்க் குற்றம் என்பது இலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப்புலிகள் என்னும் இரு தரப்பினரையும் சார்ந்தது. எனவே போர்க்குற்றங்களில் ஈடுபட்ட ஒரு தரப்பு விசாரணைகளை நடத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். உண்மையில் இலங்கையில் நடந்தது என்ன? என்ற உண்மையைக் கண்டறிய வேண்டுமானால் சுயாதீனமான சர்வதேச விசாரணையே சாத்தியமானதென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணை கட்டாயமானதாகும். இதற்கு அரசாங்கம் இணங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’