இலங்கையில் கடந்த காலங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நியமிக்கும்; என நேபாளத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் பணிப்பாளர் எந்தனி கார்டன தெரிவித்துள்ளார்.
சர்வதேச கடத்தல் மற்றும் காணாமல் போனவர்களுக்கான தினம் இன்று அனுஷ்ட்டிக்கப்படுகிறது
.காணால் போனவர்கள் தொடர்பில் நேபாளம் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் அரசாங்கங்கள், நீதிமன்றங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களை ஏற்று செயற்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவற்றில், கடத்தல் மற்றம் காணாமல் போதல் தொடர்பான சட்டங்கள் மீறப்பட்டு வருகின்றமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், சர்வதேச ரீதியாக காணப்படுகின்ற பல்வேறு கடத்தல் மற்றும் காணாமல் போதல் குறித்த முறைபாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு உயர் மட்ட ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமது உறவினர்களையும், சொத்துக்களையும் இழந்து நெடுகாலமாக காணால் போயுள்ளவர்கள் குறித்து, அவர் தமது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். __
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’