வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 15 செப்டம்பர், 2010

ஐ.நா.பெண்கள் அமைப்பின் தலைவராக சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி

டந்த ஜூலை மாதம் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையில் பெண்கள் அமைப்பின் முதலாவது தலைவராக சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மிச்சிலி பாச்லட் ஜேரியா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பெண்கள் சமத்துவம், சம உரிமை மற்றும் பாதுகாப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பெண்கள் அமைப்பு முற்றும் முழுதாக பெண்களின் நலனைக் கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.
இந்த அமைப்பின் முதல் தலைவராக சிலி நாட்டின் முன்னாள் பெண் ஜனாதிபதி மிச்சிலி பாச்லட் தலைமையேற்பார் என்று யுனெஸ்கோவின் தலைவர் இரினா பொகோவா தெரிவித்துள்ளார்.
மிச்சிலி பாச்லட் கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து இவ்வருட மார்ச் மாதம் வரை சிலி நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்த முதலாவது பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’