வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 15 செப்டம்பர், 2010

வடமராட்சி கிழக்கு மக்களின் மீள்குடியேற்றம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் ஆரம்பம்.

டமராட்சி கிழக்கு மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பான மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இன்றையதினம் (14) பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
மீள்குடியேற்றம் தொடர்பாக பிரமாண்டமான அங்குராப்பண நிகழ்வானது அப்பிரதேசத்திற்குப் பொறுப்பான 55வது படையணியினரின் ஏற்பாட்டில் யாழ்.அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தலைமையில் இன்று மருதங்கேணி பொதுமைதானத்தில் இடம்பெற்றபோது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாகப் பங்குகொண்டார்.
இந்நிகழ்வில் 55 வது படையணித் தளபதி பிரிகேடியர் சுகத் பெரேரா வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர் என். திருலிங்கநாதன் மேலதிக கல்விப்பணிப்பாளர் வே.தி.செல்வரட்ணம் பிராந்திய சுகாதார சேவைகள் உதவிப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கேதீஸ்வரன் கூட்டுறவு உதவி ஆணையாளர் அருந்தவநாதன் கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் தர்மலிங்கம் உள்ளுராட்சி திணைக்கள உதவி ஆணையாளர் மதுமதி வசந்தகுமார் ஈபிடிபி வடமராட்சி அமைப்பாளரும் முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபைத் தலைவருமான ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் போக்குவரத்து சபை மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றின் அதிகாரிகள் ஆகியோருடன் அரச அதிகாரிகள் படை அதிகாரிகள் மற்றும் மீளக்குடியேறும் பெருந்தொகையான பொதுமக்கள் ஆகியோரும் பங்குகொண்டனர்.
இங்கு சிறப்புரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் இப்பிரதேச மக்களுக்கு பொன்னான வாயப்பு கிடைத்துள்ளது. அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக தாமதிக்கப்பட்ட மீள்குடியேற்றம் இன்று ஆரம்பமாகியுள்ளது. இவ்வளவு காலமும் அவாவுடனும் விருப்பத்துடனும் உறுதியுடனும் காத்திருந்த பொதுமக்கள் இந்த வாய்ப்பினை சரிவரப் பயன்படுத்த வேண்டும். கடந்தகால தவறான அரசியல் வழிநடத்துதலின் காரணமாக விரும்பத்தகாத துன்பகரமான நிகழ்வுகளிலிருந்து இயல்பு வாழ்வினை ஜனாதிபதி மீட்டுத்தந்துள்ளார். எனவே பொதுமக்களின் சார்பில் ஜனாதிபதிக்கு எனது நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கின்றேன் எனத்தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சரவர்கள் மீள்குடியேறிய மக்களுக்குரிய அனைத்து வசதிகளும் ஒரே இரவில் கிடைத்துவிடப்போவதில்லை. ஆயினும் வளமான எதிர்காலத்தை நோக்கிய பயணமே இது. எனவே மீளக்குடியேறும் மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்த்துவைக்க உயர்மட்ட மாநாடு ஒன்று நடாத்தப்பட்டு உடனடி பிரச்சினைகளைத் தீர்க்க முழு முயற்சி எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
பருத்தித்துறை மெதடிஸ்த மகளிர் கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடன நிகழ்ச்சியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் மீக்குடியேறிய மக்களுக்கு ஆரம்பகட்ட உடனடி கொடுப்பனவாக தலா ஐயாயிரம் ரூபா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது. மேலும் வீடுகட்டுவதற்குரிய சீமெந்து கூரைத்தகடுகள் மற்றும் வீட்டு உபகரணப்பொருட்கள் எனபனவற்றை அதிதிகள் பொதுமக்களுக்கு கையளித்தனர். மேலும் மீளக்குடியேறும் பாடசாலை மாணவர்களுக்கு 55 வது படையணி சார்பில் கற்றல் உபகரணங்களை தளபதி பிரிகேடியர் சுகத் சில்வா வழங்கிவைத்தார்.
இன்று ஆரம்பமான மீள்குடியேற்ற நிகழ்வில் செம்பியன்பற்று வடக்கு தெற்கு தாளையடி வத்திராயன் மருதங்கேணி ஆழியவளை உடுத்துறை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றமை விசேட அம்சமாகும்.










0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’