வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 15 செப்டம்பர், 2010

இந்திய மீனவர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை: கடற்படைப் பேச்சாளர்

லங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என கடற்படைப் பேச்சாளர் அத்துல செனரத் இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்றுமுன்தினம் இரவு மீன்பிடிக்கச் சென்றவேளை தமது கையடக்கத் தொலைபேசி உட்பட பெறுமதியான பொருட்களை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்ததாக குற்றம் சுமத்தியிருந்தனர்.
இது குறித்து இந்திய ஊடகவியலாளர்களிடம் விளக்கியிருந்தனர்.
இச்சம்பவம் உண்மையானதா என கடற்படைப் பேச்சாளர் அத்துல செனரத்திடம் வினவினோம். அவ்வாறு கூறப்படுவதில் எவ்வித உண்மையுமில்லை என்றும் அதனை முற்றாக மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’