விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடக இணைப்பாளரும் பேச்சாளருமான தயா மாஸ்ரர் 'டான் தொலைக்காட்சிச் சேவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
.டான் தொலைக்காட்சியின் யாழ் குடாநாட்டில் கொக்குவிலுள்ள பிராந்திய அலுவலகத்தில் அவர் பணியாற்றி வருகிறார்.
இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவித்த தயா மாஸ்ரர், இந்த புதிய வாழ்க்கையையிட்டு தான் சந்தோஷமடைவதுடன், குறித்த பகுதியின் சமாதானச் சூழ்நிலை குறித்து திருப்தியடைவதாகவும் கூறினார்.
அவரது ஊடகப் பிரவேசம் குறித்து கேட்டபோது, யுத்தத்தின் பின்னர் வடபகுதியில் ஊடக சுதந்திரத்தில் முன்னேற்றம் காணப்படுவதாகத் அவர் தெரிவித்தார்.
யாழ் குடாநாட்டில் ஊடகத்துறை சுதந்திரமாகவுள்ளது. இது அனைவருக்கும் நல்லது என்றும் தயா மாஸ்ரர் தெரிவித்தார்.
இதேவேளை, புலிகள் அமைப்பின் முன்னாள் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்ரர் எங்குள்ளார் என தயா மாஸ்ரரிடம் கேட்டபோது, அவருடைய குடும்பத்தினருடன் ஜோர்ஜ் மாஸ்ரர் இருப்பதாகக் கூறினார்.
கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வஇடம்பெயர்ந்தோர் முகாமில் வைத்து தயா மாஸ்ரரும் ஜோர்ஜ் மாஸ்ரரும் இராணுவத்தினரிடம் சரணடைந்து பின்னர் கடந்த வருடம் இவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’