வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 15 செப்டம்பர், 2010

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிறுவர் சிகிச்சை விடுதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் அங்குரார்ப்பணம்.

ப்பானிய சர்வதேச அபிவிருத்திக்கும் நிவாரணத்திற்குமான நிறுவனம் ஜப்பானிய மக்களுடன் இணைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான சிகிச்சை விடுதியை அமைத்துக் கொடுத்துள்ளனர்.
இன்றையதினம் (14) காலை மேற்படி சிறுவர் சிகிச்சை விடுதியை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அதனை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் ஜப்பானிய சர்வதேச அபிவிருத்திக்கும் நிவாரணத்திற்குமான நிறுவனத்தின் சார்பில் பங்குகொண்ட அதன் முகாமைத்துவ பணிப்பாளர் நொயிக்கியோ இசுக்காவா சிறுவர் சிகிச்சைப் பிரிவு விடுதியை திறந்துவைத்த அதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவினை திறந்து வைத்தார்.
இவ் அங்குரார்ப்பண நிகழ்வினைத் தொடர்ந்து வைத்தியசாலை பணிமனைக் கட்டடத்தில் பொதுக்கூட்டமொன்று இடம்பெற்றது. யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் உதவிப்பணிப்பாளர் வைத்தியகலாநிதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ்.அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் சாவகச்சேரி பிரதேச செயலாளர் சிறினிவாசன் ஜப்பானிய சர்வதேச அபிவிருத்திக்கும் நிவாரணத்திற்குமான நிறுவனத்தின் சார்பில் அதன் முகாமைத்துவ பணிப்பாளர் நொயிக்கியோ இசுக்காவா பிராந்தியப் பணிப்பாளர் கொட்டாரோ இசிக்காவா திட்டப்பணிப்பாளர் ஜூஜிகியோ நொசுவோனா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தயாளன் சாவகச்சேரி நகர படைத்தளபதி மேஜர் ஹேமரட்ண தென்மராட்சி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயலத் கட்டடத் திணைக்களப் பணிப்பாளர் குகனேசன் வைத்தியசாலை அபிவிருத்திக்குழுத் தலைவர் சபாரட்ணம் சாவகச்சேரி வங்கிகளின் முகாமையாளர்கள் வர்த்தக சங்க நிர்வாகத்தினர் ஆகியோர் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள் தாதியர்கள் மற்றும் ஊழியர்களுடன் பெருமளவு பொதுமக்களும் பங்குகொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மூன்று கோடி ரூபா செலவில் மேற்படி சிறுவர் சிகிச்சை விடுதியை அமைதுத்தந்தமைக்காக பொதுமக்களின் சார்பில் ஜப்பானிய அரசிற்கும் மக்களுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன் கடந்த காலத்தில் வலிந்து கட்டிய யுத்தத்தின் மூலம் முற்றாக அழிவடைந்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை மீளக்கட்டியெழுப்பப்படுவது போல யாழ். குடாநாடும் மீண்டெழும் காலம் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிவித்தார். ஜப்பானிய சர்வதேச அபிவிருத்திக்கும் நிவாரணத்திற்குமான நிறுவனத்தின் தலைவர் சுமிகோ காறாவின் செய்தியை அவரின் சார்பில் சார்பில் பிராந்தியப் பணிப்பாளர் கொட்டாரோ இசிக்காவா வாசித்தார்.
இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய பிராந்திய சுகாதார சேவைகள் உதவிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் உரையாற்றுகையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அடுத்த கட்டமாக பின்லாந்து அரசின்உதவியுடன் 130 மில்லியன் ரூபா செலவில் இரண்டு நோயாளர் விடுதிகள் இரண்டு சத்திரசிகிச்சைக் கூடங்கள் மற்றும் வைத்திய நிபுணர் விடுதிகள் என்பன அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.










0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’