பேஸ்புக்' இணையத்தளத்திற்கு எதிராக பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த வாரம் அதிகாரிகள் 'பேஸ்புக்' இணையத்தள பாவனையாளர் ஒருவரின் 'பதிவை' கண்டுபிடித்து தடை செய்ததாகவும் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
.'பேஸ்புக்' இணையத்தளத்திற்கு எதிராக கடந்த வாரம் 4 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாகவும் டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு அவர் கூறினார்.
மேற்படி இணையத்தில் இலங்கைப் பெண்களின் படங்களை அவர்களது அனுமதியின்றி மாற்றம் செய்து சிலரால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இப்படங்கள் வேறு இணையத்தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்து அநாகரிகமான முறையில் மாற்றம் செய்து பேஸ்புக்கில் வெளியிடப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இந்த வருட நடுப்பகுதியில் 'பேஸ்புக்' இணையத்தளத்திற்கு எதிராக சுமார் 50 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் அதிகாரி கூறினார்.
மேற்படி நடவடிக்கைகளின் பின்னாலுள்ளவர்கள் பயன்படுத்தும் பிரத்தியேக ஐ.பி முகவரிகளை கண்டறிவது கடினமானது எனவும் ஆனால், தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் உதவியுடன் இவர்களைக் கண்டுபிடிப்பதற்கு மாற்றுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் மேற்படி அதிகாரிகள் கூறினர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’