இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் போர் குற்றங்களை ஆராய ஐக்கிய நாடுகள் செயாலாளர் நாயகம் நியமிக்க உத்தேசித்துள்ள நிபுணர்கள் அடங்கிய குழுவுக்கு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இந்த இரு நாடுகளும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கின்றன. பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடுமையான அழுத்தங்கள் காரணமாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அமைக்க உள்ள இந்த குழு தொடர்பில் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்க ரஷ்ய பிரதமர் விளடீமீர் புட்டின் மற்றும் சீன தலைவர்கள் தெரிவித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.பான் கீ மூன் குறித்த நிபுணர்கள் குழுவை அமைத்து அதன் அறிக்கையை பாதுகாப்புச் சபையில் சமர்பித்தால், சீனாவும், ரஷ்யாவும் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதனை தடுக்கும் எனவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.
அதேவேளை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் இந்த செயற்பாடு குறித்து அணிசேரா நாடுகளின் தலைமை பொறுப்பை வகிக்கும் எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கும் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’