மூன்றாவது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' கிரிக்கெட் தொடரில், இன்று 18வது லீக் போட்டியில் கும்ளேவை கேப்டனாக கொண்ட பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியும், ரெய்னாவின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என பல பிரிவிலும் அசத்திய, பலம் வாய்ந்த பெங்களூரு அணியிடம் இளம் வீரர் ரெய்னா தலைமையிலான சென்னை அணி 36ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியைத் தழுவியது.
முன்னதாக டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதன்படி பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன் எடுத்தது. ஆரம்பத்தில் அந்த அணி ரன் எடுக்க முடியாமல் தினறினாலும், இறுதிகட்டத்தில் உத்தப்பாவின் அதிரடியில் 171ரன்கள் குவித்தது. உத்தப்பா 38 பந்துகளில் 6சிக்சர்கள் 3பவுன்டரிகள் வீதம் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
172 ரன் வெற்றி இலக்காக கொண்டு அடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 135 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அதிரடி வீரர் ஹெய்டனின் எதிர்பாராத ரன் அவுட் ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது. ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் பத்ரிநாத் போராடினார்.
இருப்பினும் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7விக்கெட்டுகள் இழப்பிற்கு 135ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’