வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இந்தியன் பிரிமியர் லீக் ஐ.பி.எல். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியன் பிரிமியர் லீக் ஐ.பி.எல். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

ஐபிஎல் பதான்-பந்து-வீச்சு சுருண்டது-டெல்லி பஞ்சாப்-அணி

இன்று மாலை 4 மணிக்கு தொடங்கிய ஐபிஎல் போட்டியில், முதலில் களமிறங்கிய டெல்லி அணி 19.3 ஓவர்களில் 111 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஐ.பி.எல். போட்டியில் இன்று உள்ள இரண்டு ஆட்டங்களில் டெல்லி - பஞ்சாப் மற்றும் மும்பை - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

ஐ.பி.எல். டி-20: மும்பையை வீழ்த்தியது சென்னை அணி

3வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் 12 நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் அதிக புள்ளிகள் பெறும் முதல் 4 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

சனி, 3 ஏப்ரல், 2010

ஐ.பி.எல்., டுவென்டி -20 : சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனை வெற்றி

சென்னை சேப்பாகத்தில் நடந்த இன்றைய ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சென்னையில் நடந்த ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

செவ்வாய், 30 மார்ச், 2010

மும்பை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி!

மும்பைபஞ்சாப்அணிக்கு எதிரான.பி.எல்., லீக்போட்டியில் சச்சினின்மும்பை இந்தியன்ஸ்அணி, 4 விக்கெட்வித்தியாசத்தில்வெற்றிபெற்றது.
மூன்றாவது .பி.எல்.,தொடர் தற்போதுஇந்தியாவில் நடக்கிறது.இதன் 29வது லீக்போட்டியில் மும்பைஇந்தியன்ஸ்பஞ்சாப்அணிகள்மோதின.இப்போட்டியில்டாஸ் வென்ற மும்பை கழத்தடுப்பை தெரிவு செய்தது.

வியாழன், 25 மார்ச், 2010

இன்றைய 20,21 ஆவது ஐபிஎல் போட்டிகள்




-ஐ.பி.எல் போட்டியின் இன்றைய 21ஆவது ஆட்டத்தில் ரெய்னாவின் சென்னை சூப்பர் கிங்ஸ்- சச்சினின் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

மற்று மொரு 20 ஆவது போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் டெல்லி டார்டெவில்ஸ் அணி, கும்ளேயின் பெங்களூரு ரோயல் சலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

செவ்வாய், 23 மார்ச், 2010

தோணி இல்லாமல் தொடர் தோல்வியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

மூன்றாவது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' கிரிக்கெட் தொடரில், இன்று 18வது லீக் போட்டியில் கும்ளேவை கேப்டனாக கொண்ட பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியும், ரெய்னாவின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என பல பிரிவிலும் அசத்திய, பலம் வாய்ந்த பெங்களூரு அணியிடம் இளம் வீரர் ரெய்னா தலைமையிலான சென்னை அணி 36ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியைத் தழுவியது.

செவ்வாய், 19 ஜனவரி, 2010

கிரிக்கெட் வீரர்கள் கோடிக்கணக்கில் ஏலம் போயினர் : விற்காமல் போன பாகிஸ்தான் வீரர்கள்


மும்பை: இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) "டுவென்டி-20' கிரிக்கெட் தொடருக் கான ஏலம் இன்று மும்பையில் துவங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கெய்ரான் போலார்டு 3 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் வரை விலை போயுள்ளார். இவரை மும்பை இந்தியன் அணி விலைக்கு வாங்கியுள்ளது. ஐ.பி.எல்., அமைப்பின் சார்பில், மூன்றாவது "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 12 முதல் ஏப்., 25 ம் தேதி வரை இந்தியாவில் நடக்க உள்ளது. இத்தொடருக்கான வீரர்கள் ஏலம், இன்று மும்பையில் நடந்தது. மொத்தம் உள்ள 8 அணிகள் ஏலத்தின் மூலம் வீரர்களை ஒப்பந்தம் செய்ய உள்ளன. மொத்தம் 97 பேர், முதற் கட்டமாக ஐ.பி.எல்., ஏலத்துக்கு விண்ணப்பம் செய்தனர்.


வீரர்களின் திறமையை அடிப்படையாகக் கொண்டு 66 பேர் மட்டுமே இறுதியில் தேர்வாயினர். அதிக பட்சமாக ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா தரப்பில் 11 வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றனர். வெஸ்ட் இண்டீஸ் (8 பேர்), இலங்கை (8 பேர்), இங்கிலாந்து (9 பேர்), நியூசிலாந்து (4 பேர்) வீரர்களும் ஏலத்தில் பங்கேற்றனர். வங்கதேசம், கனடா, நெதர்லாந்து, ஜிம்பாப்வே தரப்பில் தலா ஒரு வீரர் வாய்ப்பு பெற்றனர்.

கடந்த 2008 ம் ஆண்டு முதல் ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடந்தது. அப்போது நடந்த ஏலத்தில் 3 ஆண்டுகளுக்கு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அவர்களது ஒப்பந்த காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைகிறது. தற்போது 3 வது ஐ.பி.எல்., தொடருக்கான ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள், இந்த ஆண்டு (2010) மட்டுமே பங்கேற்க முடியும். .


வெஸ்ட் இண்டீசின் கெய்ரன் போலார்டு, கெமர் ரோக், பாகிஸ் தானின் அப்ரிதி, உமர் அக்மல், நியூசிலாந்தின் ஷேன் பாண்ட், ஆஸ்திரேலியாவின் ஹாடின், பிலிப் ஹியுஸ் உள்ளிட்ட ஒரு சிலரை மட்டுமே ஏலத்தில் ஒப்பந்தம் செய்ய அணிகள் விரும்புகின்றன.

யார் ? எவ்வளவுக்கு விலை போயினர் : ஏலத்தில் வீரர்கள் விலை போன விவரம் வருமாறு : வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்ரான் போலார்டு என்பவர் 7 லட்சத்து 50 ஆயிரம் டாலர் ( இந்திய ரூபாயில் : 3 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் ) , இவரை மும்பை இந்தியன் அணி வாங்கியுள்ளது. தென் ஆப்ரிக்க ஆல் ரவுண்டர் வீரர் வெயர்ன் பார்னர் என்பவர் 6 லட்சத்து 10 ஆயிரம் டாலருக்கு ( இந்திய ரூபாயில் : 2 கோடியே 74 லட்சத்து 50 ஆயிரம் ) இவரை டில்லி டேர்டெவில்ஸ் அணி விலைக்கு வாங்கியுள்ளது. நியூஸிலாந்து வீரர் ஷேன் பாண்ட் என்பவர் 7 லட்சத்து 50 ஆயிரம் டாலருக்கு ( இந்திய ரூபாயில் : 3 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம்) , இவரை கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி விலைக்கு வாங்கியுள்ளளது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேமர் ரோச் 7 லட்சத்து 20 ஆயிரம் டாலர் ( இந்திய ரூபாயில்: 3 கோடியே 24 லட்சம் ). இவரை டெக்கான் சார்ஜர்ஸ் அணி வாங்கியுள்ளது. இந்த ஏலத்தில் ஒரே வீரரை 2 அணிகள் கேட்கும் பட்சத்தில் டைம் பிரேக்கர் முறையில் விற்று கொடுக்கப்பட்டது. அந்தந்த அணி ஓனர்கள் ஏலம் கேட்டனர்.

இந்திய வீரர் முகம்மது கைப், பாகிஸ்தான் வீரர் அப்ரிதி , ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹெடின் ஆகியோர் முதல் கட்ட ஏலத்தில் யாரும் விலைக்கு வாங்க முன்வரவில்லை. இந்திய வீரர் முகம்மது கைப் 2 லட்சத்து 50 ஆயிரம் டாலருக்கு ( இந்திய ரூபாயில்: ஒரு கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம்) இவரை கிங்ஸ் 11 பஞ்சாப் அணி விலைக்கு வாங்கியுள்ளது.இவர் முதலில் ஏலம் விடுக்கப்பட போது யாரும் ஏலம் கேட்கவில்லை. 2 வது ரவுண்டுக்கு வந்தபோதுதான் இவர் விற்கப்பட்டார். பாகிஸ்தான் வீரர்கள் அப்ரிதி, கம்ரன் அக்மால் ஆகிய இருவரையும் கடைசிவரை யாரும் விலைக்கு வாங்கவில்‌லை என்பது குறிப்பிடத்தக்கது.