இன்று மாலை 4 மணிக்கு தொடங்கிய ஐபிஎல் போட்டியில், முதலில் களமிறங்கிய டெல்லி அணி 19.3 ஓவர்களில் 111 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஐ.பி.எல். போட்டியில் இன்று உள்ள இரண்டு ஆட்டங்களில் டெல்லி - பஞ்சாப் மற்றும் மும்பை - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
முதலில் மாலை 4 மணிக்கு டெல்லியில் தொடங்கிய போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் - கிங்ஸ்வென் பஞ்சாப் அணிகள் களமிறங்கின.டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்கம் முதலே பஞ்சாப் அணியின் அபார பந்து வீச்சால் ரன் எடுக்க டெல்லி அணி திணறியது.பதான் 3 விக்கெட்டுகளையும், சாவ்லா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்த, அபிலிஷ், யுவராஜ் மற்றும் தேரோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
சொற்ப ரன்களின் அந்த அணியின் வீரர்கள் ஆட்டமிழக்க,அதிகபட்சமாக காம்பீர், மான்ஹார் ஆகியோரால் தலா 26 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் 19.3 ஓவர்களில் 111 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது.
இதனையடுத்து டெல்லி அணி களமிறங்கி ஆடிவருகிறது.
இதனிடையே ஜெய்ப்பூரில் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
14 புள்ளிகள் பெற்று இருக்கும் மும்பை அணி, இன்றயை ஆட்டத்தில் வென்றால் அரை இறுதிக்கு தகுதி பெறும்.ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் அரை இறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’