இலங்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆட்சியமைக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளமையானது இலங்கை இந்திய உறவுகளை மேலும் பலமடையச் செய்யுமென இந்திய மக்கள் கட்சியின் தலைவர் சுப்பிரமணியசுவாமி தெரிவித்துள்ளார்.
கிடைத்துள்ள வெற்றியைக் கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியான முன்நோக்கிய பாதைக்கு காலடி எடுத்து வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதையடுத்து சுப்பிரமணியசுவாமி விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொண்டு வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு அதிகாரங்களைப் பிரித்துக் கொடுப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க இந்தத் தேர்தல் வெற்றி பயன்படுத்தப்படுமென தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் சுப்பிரமணியசுவாமி தனதறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’