மற்று மொரு 20 ஆவது போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் டெல்லி டார்டெவில்ஸ் அணி, கும்ளேயின் பெங்களூரு ரோயல் சலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
தொடர்ந்து இரண்டு தோல்வியை சந்தித்த சென்னை அணி இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, மும்பை அணி சவால் கொடுக்க காத்திருக்கிறது.
சென்னையை பொருத்த வரை பிளின்டப், ஜெக்கப் ஓரம், டோனி காயம், பங்கேற்ற ஐந்து போட்டிகளில் 3இல் தோல்வி என தள்ளாடுகிறது. துடுப்பாட்டத்தில் ஹைடனை தான் நம்பியுள்ளது எனலாம்.
பார்த்திவ், முரளி விஜய் கை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.பந்து வீச்சில் பாலாஜி, மார்கல், முரளிதரன் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை விடவும் அணித்தலைவர் பொறுப்பில் உள்ள ரெய்னா பல காட்டயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
மும்பை அணி பங்கேற்ற 4 போட்டிகளில் 3இல் வெற்றி பெற்றுள்ளது. அணித்தலைவர் சச்சின், இளம் வீரர்கள் திவாரி, ராயுடு, போலார்டு, பிராவோ ஆகியோர் பேர்மில் உள்ளனர். பந்து வீச்சைப் பொறுத்தவரையில் சகிர் கான், மலிங்கா, ஹர்பஜன் சிங் என சிறப்பாட்ட வீரர்கள் உள்ளனர்.
கலிஸ், மனீஷ் பாண்டே, உத்தப்பா என துடுப்பாட்ட வீரர்களும், பிரவீண் குமார், வினய் குமார், ஸ்டைன் என சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள பெங்களூரு அணியை சமாளிப்பது கடினம். இருப்பினும் டெல்லி அணிக்கு இன்றைய வெற்றி முக்கியம். இரு அணிகளும் சிறப்பாக விளையாடும் என்பதால் இவ்விரு போட்டிகளும் விறுவிறுப்பாக இருக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’