-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
செவ்வாய், 23 மார்ச், 2010
நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்!: மல்லிகா ஷெராவத்
நடிகைகள் போர்த்திக் கொண்டு நடிப்பதால் எந்த நன்மையும் வந்துவிடப் போவதில்லை. படங்கள் ஓட வேண்டுமென்றால் நடிகைகள் உடலை மறைத்து நடிக்கக்கூடாது என்கிறார் மல்லிகா ஷெராவத்.
பாலிவுட்டின் கவர்ச்சி ப் புயல் மல்லிகா. தமிழில் கமல்ஹாஸனுடன் தசாவதாரம் படத்தில் கவர்ச்சி வேடத்தில் வந்தார். அதுமட்டுமல்ல, அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கவர்ச்சி உடையில் வந்து கதிகலத்தினார்.
போர்த்திக் கொண்டு நடிப்பதை எப்போதும் விரும்பாத மல்லிகா சமீபத்தில் அளித்துள்ள பத்திரிகைப் பேட்டி இது:
இந்தி சினிமா என்னை அத்தனை சீக்கிரம் ஏற்கவில்லை. படிப்பை முடித்ததும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டேன். அதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நான் அவர்களை விட்டு பிரிந்து வந்து தனியாக வசித்தேன்.
அப்போது முன்னணி டைரக்டர்கள், தயாரிப்பாளர்களிடம் சென்று வாய்ப்பு கேட்டு நான் பட்ட அவமானம் கொஞ்சமல்ல. அவர்கள் என் முகத்தைப் பார்த்து நடிகைக்கான தகுதி உன்னிடம் இல்லை என்று கூறி நிராகரித்தனர்.ஆனாலும் நான் முயற்சியை கைவிடவில்லை. என்னிடம் இருந்த நகைகள் அனைத்தையும் விற்று செலவு செய்தேன். அதுவும் காலியான பிறகுதான் போட்டோகிராபர் பரூக் பாட்டியா எனக்கு அறிமுகமானார். அவர் எனது முக அழகுக்கு முக்கியம் தராமல் உடல் தோற்றத்தை மிடுக்காக படம் பிடித்தார்.
அந்த போட்டோக்களுடன் பட நிறுவனங்களுக்கு சென்று வாய்ப்பு கேட்டேன். அப்போது குவாலிஸ் என்ற படத்தயாரிப்பாளர் எனது உடல் அழகைப் பார்த்து வாய்ப்பு கொடுத்தார். படம் ஓரளவு வெற்றி பெற்றது.
இதற்கு அடுத்து மர்டர் என்ற படத்தில் நடித்தேன். இப்படம் அபார வெற்றி பெற்றதுடன் லட்சக்கணக்கான ரசிகர்களை எனக்கு பெற்றுத் தந்தது.
இப்போதெல்லாம் நடிகைகள் உடலை மறைத்து நடித்தால் படம் ஓடாது. இருக்கிற அழகை வெளிக்காட்டினால்தான் ஓடும். ரசிகர்களும் முக அழகை விட உடல் அழகுக்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள். எனவே போர்த்திக் கொண்டு குடும்பப் பெண்ணாகத்தான் நடிப்பேன் என்றால் இனி வேலைக்காகாது.
எனக்கு யாரும் போட்டியில்லை... நானும் யாருக்கும் போட்டியில்லை.
ஐஸ்வர்யா ராய்க்கு முக அழகு நன்றாக உள்ளது. இதே போல் அவரது உடல் தோற்றமும் நன்றாக உள்ளது. எனக்கு யார் மீதும் பொறாமை கிடையாது என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’