ஓக்லஹாமா: அமெரிக்காவைச் சேர்ந்த பட்டதாரி மாணவர் அமெரிக்காவின் ஓக்லஹாமாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அங்குள்ள மளிகை நிறுவனம் ஒன்றில் அவர் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனத்திலேயே வைத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரை சுட்டுக் கொன்றது வழிப்பறிக் கொள்ளையர் எனத் தெரிகிறது.
சுட்டுக் கொல்லப்பட்ட மாணவரின் பெயர் பிரசாந்த். ஹைதரபாபாத், சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர். கடந்த ஜனவரி மாதம்தான் ஓக்லஹாமா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் அறிவியல் படிப்பில் சேர்ந்தார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. பிரசாந்த்தின் நண்பர்கள்தான் அவரது பெற்றோருக்கு இந்தத் தகவலை தெரிவித்துள்ளனர்.
மெர்ச்சன்ட் நேவியிலிருந்து விலகி உயர் படிப்புக்காக அமெரிக்கா போனவர் பிரசாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’